UPDATED : மார் 29, 2025 12:00 AM
ADDED : மார் 29, 2025 11:30 AM

சென்னை:
அக்னிவீர் திட்டத்தின் படி இந்திய ராணுவத்தில் சேர ஏப்., 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
நாட்டில் உள்ள இளைஞர்களை ராணுவத்தில் ஈடுபடுத்தும் வகயில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அக்னிவீர் திட்டம் செயல்படுகிறது. இதில் 4 வருட காலத்திற்கு ராணுவத்தில் பணியாற்ற முடியும். 10ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
இந்நிலையில் அக்னிவீர் தொழில்நுட்ப பணி, பொது பணி, சிப்பாய், கிளர்க், ஹவில்தார் போன்ற பல்வேறு பிரிவுகளில் ஆட்களல் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு, மருத்துவ தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு முறையில் மட்டுமே ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க ஏப்.,10ம் தேதி கடைசி நாள். கூடுதல் விபரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.