UPDATED : அக் 27, 2023 12:00 AM
ADDED : அக் 28, 2023 07:09 AM
சென்னை:
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளில், அரசு மற்றும் அரசு ஒதுக்கீட்டுக்கு, 1,226 இடங்கள் உள்ளன.அதேபோல, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு, 313; நிர்வாக ஒதுக்கீட்டுக்கு, 551 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 4,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து, தரவரிசை பட்டியலில் தகுதி பெற்றுள்ளனர்.இப்படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கவுன்சிலிங், சென்னை அரும்பாக்கம் சித்தா மருத்துவமனை வளாகத்தில் உள்ள, தேர்வுக்குழு அலுவலகத்தில் அக்., 26ல் துவங்கியது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ், 89 இடங்கள் ஒதுக்கப்பட்டன. விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், யூனியன் பிரதேச ஒதுக்கீட்டின் கீழ் உள்ள, 12 இடங்கள் என, 101 இடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.இதையடுத்து, 29ம் தேதி வரை, அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங்; 31ம் தேதி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங்; நவ., 1, 2ல் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது.
