தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மண்டல விளையாட்டு போட்டிகள் 1,010 ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்பு

மண்டல விளையாட்டு போட்டிகள் 1,010 ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்பு

மண்டல விளையாட்டு போட்டிகள் 1,010 ஐ.டி.ஐ., மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : மார் 05, 2026 03:12 PM

ADDED : மார் 05, 2026 03:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2026 03:12 PM ADDED : மார் 05, 2026 03:15 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

உடுமலை:
உடுமலையில், கோவை மண்டல அளவிலான அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ., மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கோவை மண்டல அளவிலான அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், உடுமலை அரசு கல்லுாரி மைதானத்தில் நடந்தது.

திருப்பூர் கலெக்டர் மணிஷ் நாரணவரே தலைமை வகித்து, விளையாட்டு வீரர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். ஒலிம்பிக் தீபத்தை, உடுமலை கோட்டாட்சியர் குமார் ஏற்றி வைத்தார்.

கோவை மண்டல இணை இயக்குனர் வேல் முருகன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். உடுமலை அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நதிச்சந்திரன் வரவேற்றார். பயிற்சி அலுவலர் ரமேஷ்குமார் முன்னிலை வகித்தார்.

கோவை மண்டல அளவிலான போட்டிகளில், 19 தொழிற்பயிற்சி நிலையங்களை சேர்ந்த, 160 மாணவியர்களும், 850 மாணவர்கள், என, 1,010 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, நிலைய மேலாண்மை குழு தலைவர் மீனாட்சி சுந்தரம், சண்முகபிரியா நிறுவனங்களின் இயக்குனர் அருண்கார்த்திக், அரசு கல்லுாரி முதல்வர் சிவக்குமார் உள்ளிட்டோர் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us