தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சத்துணவில் பல்லி: அரியலூரில் 103 மாணவர்களுக்கு சிகிச்சை

சத்துணவில் பல்லி: அரியலூரில் 103 மாணவர்களுக்கு சிகிச்சை

சத்துணவில் பல்லி: அரியலூரில் 103 மாணவர்களுக்கு சிகிச்சை


UPDATED : ஆக 20, 2013 12:00 AM

ADDED : ஆக 20, 2013 07:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2013 12:00 AM ADDED : ஆக 20, 2013 07:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நேற்று வழங்கப்பட்ட சத்துணவில், பல்லி இறந்து கிடந்ததால், பீதியடைந்த மாணவர்கள், 103 பேர், அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்டம், குன்னத்தில், அரசு மேல்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு மாணவர்கள் வரை, 245 பேருக்கு, சத்துணவு வழங்கப்படுகிறது. நேற்று மதியம், 1:00 மணியளவில், 145 மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது.

இதில், எட்டாம் வகுப்பு மாணவர் செல்வராஜ், சாப்பாட்டுத் தட்டில், பல்லி இறந்து கிடந்ததையடுத்து, தலைமை ஆசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்களிடம் மாணவர்கள் தெரிவித்தனர். "மாணவர்களை சாப்பிட வேண்டாம்&' எனக் கூறிய தலைமை ஆசிரியர், 108 அவசரகால ஆம்புலன்ஸ், கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம், அரியலூர் அரசு மருத்துவமனையில், சத்துணவு சாப்பிட்ட 103 மாணவர்களையும் சேர்த்தனர்.

தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர், பள்ளியில் திரண்டனர். "சத்துணவை, தலைமையாசிரியர் சாப்பிட்டு பரிசோதித்த பின் மாணவர்களுக்கு வழங்கினாரா?&' என, விசாரித்து வருகின்றனர்.

அரியலூர் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர், டாக்டர் வானொலி கூறுகையில், "சிகிச்சைக்கு வந்த எந்த மாணவர்களுக்கும், வாந்தி, மயக்கம் ஏற்படவில்லை. அவர்களின் திருப்திக்காகவே மருந்து, மாத்திரை வழங்கியுள்ளோம். இருப்பினும், மாலை, 6:00 மணி வரை, டாக்டர்களின் கண்காணிப்பில் இருக்கச் செய்து, வீட்டுக்கு அனுப்பி வைக்க உத்தவிடப்பட்டுள்ளது” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us