தமிழகத்தில் காலியாக உள்ள 1,251 டாக்டர் பணியிடங்கள்
தமிழகத்தில் காலியாக உள்ள 1,251 டாக்டர் பணியிடங்கள்
UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 08:47 AM
சென்னை:
சென்னை பல் மருத்துவ கல்லுாரியில், மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. இதில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் பங்கேற்று மாணவர்களுக்கு, சான்றிதழ் வழங்கினார். பின், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் 1,021 டாக்டர் பணியிடங்கள் இன்று நிரப்பப்பட்டுள்ளன. அதேநேரம், 1,251 காலி பணியிடங்கள் இன்னும் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, காலி பணியிடங்கள் நிரப்பப்படும். தேர்தல் அறிவிப்பு வந்தாலும், டாக்டர்கள் பணியிடங்களை நிரப்புவதில் சிக்கல் இருக்காது. அதேபோல, டாக்டர்கள் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது.சென்னை பல் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை கட்டடத்தில், மேலும், நான்கு மாடிகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் ஆராயப்படுகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.