தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வுக்கான: உத்தேச பட்டியல் தயாரிப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வுக்கான: உத்தேச பட்டியல் தயாரிப்பு

அரசு பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வுக்கான: உத்தேச பட்டியல் தயாரிப்பு


UPDATED : டிச 25, 2010 12:00 AM

ADDED : டிச 25, 2010 04:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 25, 2010 12:00 AM ADDED : டிச 25, 2010 04:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தாலுகா ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பாடத்தின் கீழ் 38 அரசு பள்ளிகளும், மூன்று நகராட்சி பள்ளிகளும், ஏழு அரசு உதவி பெறும் பள்ளிகளும், ஒரு சுய நிதி பள்ளிகளும் சேர்த்து 49 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகள் மூலம் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் குறித்த உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.



இப்பட்டியல்படி, பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் இரண்டாயிரத்து 822 ஆண்கள், மூவாயிரத்து 357 பெண்கள் தேர்வு சேர்த்து மொத்தம் ஆறாயிரத்து 179 பேர் தேர்வு எழுத உள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு(2010) நடந்த பிளஸ் 2 பொதுத் தேர்வை பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், இரண்டாயிரத்து 553 மாணவர்களும், மூவாயிரத்து 52 மாணவிகள் சேர்த்து ஐந்தாயிரத்து 605 பேர் தேர்வு எழுதினர்.



கடந்தாண்டை விட இந்தாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும், நடப்பாண்டு நிலவரப்படி மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்வு எழுதவுள்ளனர். நடப்பாண்டில் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் குறித்த உத்தேச பட்டியல், முதன்மை கல்வி அலுவலகம் மூலம் தேர்வு துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அங்கு, பட்டியல் சரிபார்க்கப்பட்ட பின் பொள்ளாச்சி கொண்டு வரப்பட்டு, இறுதி பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.



தேர்வுக்கான இறுதி பட்டியல் ஜன., முதல் வாரத்தில் வெளியிடப்படவுள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. தேர்வுக்காக, மொத்தம் 16 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொள்ளாச்சி தாலுகாவில் 14 மையங்களும், வால்பாறை தாலுகாவில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வை தனியாக எழுத விரும்பும் மாணவர்கள் ஏற்கனவே மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளனர்.



இதில், 300 பேர் தனித்தேர்வு எழுதவுள்ளனர். விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு வரும் பிப்., மாதம் சிறப்பு கட்டணத்தில், "தத்கல்' முறையில் விண்ணப்பிக்க அறிவிக்கப்படும். தனித்தேர்வாளர்களுக்கும் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திலேயே தேர்வு மையம் அமைக்கப்படும். "தத்கல்' முறையில் விண்ணப்பிக்கும் தேர்வாளர்களுக்கு சென்னையில் மையம் அமைக்கப்படும். இத்தகவலை கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us