தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு!

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு!


UPDATED : டிச 03, 2009 12:00 AM

ADDED : டிச 03, 2009 02:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2009 12:00 AM ADDED : டிச 03, 2009 02:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு


மாநில அளவிலான தேர்ச்சி விகிதத்தில் கோவை மாவட்டம் 12ம் இடத்தில் உள்ளது.நடப்பு 2009-10 கல்வியாண்டில் தேர்ச்சி சதவீதத்தை முதலிடத்துக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி மேற்கொண்டுள்ளார்.


இதன் ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு பாடவாரியாக நூறு சதவீதம் பெற்ற ஆசிரியர்களை பயன்படுத்தி, தேர்ச்சி சதவீதத்தில் பின்தங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்வுகளில் 60 சதவீதத்துக்கு குறைவான தேர்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் நடவடிக்கையின் அடுத்த கட்டமாக, வரும் அரையாண்டு தேர்வு முதலே மாணவர்களின் படிப்பில் தீவிர கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.


இது தொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கோவை மாவட்டத்தில் டிச., 14 முதல் அரையாண்டு தேர்வுகள் துவங்கவுள்ளன. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு காலையில் தேர்வுகள் முடிந்தவுடன், அன்றைய தினம் மதியமே அடுத்த நாள் நடைபெறவிருக்கும் தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார் செய்ய வேண்டும். அந்த தேர்வுக்கான பாட ஆசிரியரை சிறப்பு வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இது சம்பந்தமாக, தேர்வு கண்காணிப்பு அட்டவணை தயார் செய்து, சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர் மதியம் நடைபெறவிருக்கும் சிறப்பு வகுப்பில் பங்கேற்க வசதியாக முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும்.


தேர்வு முடிந்தவுடன் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் சிறப்பு வகுப்புகளில் கலந்து கொள்ள வசதியாக, மதிய உணவுடன் வரும்படி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வலியுறுத்த வேண்டும். இந்த சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பாட ஆசிரியர்களையும் மாணவர்களையும் கண்டிப்பாக பங்கேற்க செய்து, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொது தேர்வு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்த தனியார் பள்ளிகளுக்கு இணையாக பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கை பெற்றோர் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us