UPDATED : டிச 03, 2009 12:00 AM
ADDED : டிச 03, 2009 02:48 PM
அ நிறம் | அளவு
இத்தகவலை தமிழ்நாடு ஆசிரியர்கள் கல்வி பல்கலைக்கழகத் துணைவேந்தர் டி.பத்மநாபன் தெரிவித்தார். நான்கு ஆண்டு பி.ஏ.,பி.எட்., பி.எஸ்சி.,பி.எட்., படிப்புகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலிடம் விரைவில் அனுமதி கோரி விண்ணப்பிக்க உள்ளோம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது இப்பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 600 கல்லூரிகள் பி.எட்., படிப்புகளை அளித்து வருகின்றன. யோகாவை பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். புகார்கள் கூறப்படும் பி.எட்., கல்லூரிகளின் செயல்பாடுகளை ஆராய அதிகாரிகள் திடீர் சோதனைகளை நடத்தி வருகின்றனர். குறைபாடுகள் கண்டறியப்படும் கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று துணைவேந்தர் பத்மநாபன் தெரிவித்தார்.
