தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘உடற்கல்வியியலில் ஆர்வம் மேம்பட வேண்டும்’

‘உடற்கல்வியியலில் ஆர்வம் மேம்பட வேண்டும்’

‘உடற்கல்வியியலில் ஆர்வம் மேம்பட வேண்டும்’


UPDATED : டிச 03, 2009 12:00 AM

ADDED : டிச 03, 2009 04:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 03, 2009 12:00 AM ADDED : டிச 03, 2009 04:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பல்கலைக்கழகம் பற்றி...
கடந்த 2005ம் ஆண்டு டிசம்பரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது. இதன்மூலம், நாட்டிலேயே உடற்கல்வி மற்றும் விளையாட்டுக்கு பிரத்யேகமாக பல்கலைக்கழகம் துவங்கிய மாநிலம் என்ற சிறப்பைப் தமிழகம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு முதல் தொலைநிலைக் கல்வி முறையில் மொத்தம் 21 பாடங்களில் ஆராய்ச்சி, எம்.பி.ஏ., எம்.எஸ்சி., முதுநிலை மற்றும் இளநிலை டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன. முழுநேர படிப்பாகவும் 5 துறைகளின்கீழ் 20க்கும் மேற்பட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. இப்பல்கலையின்கீழ் மாநிலம் முழுவதும் 10 கல்லூரிகள் இணைப்பு பெற்றுள்ளன.


புதிய வளாகத்தில் எப்போது பல்கலைக்கழகம் செயல்படத் துவங்கும்?
சென்னை வண்டலூர் அருகே மேலக்கோட்டையூர் கிராமத்தில் 125 ஏக்கர் பரப்பளவில் புதிய பல்கலைக்கழக வளாகம் கட்டப்பட உள்ளது. இதற்காக 8.5 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. சுற்றுச் சுவர் கட்டுவதற்கு தனியாக ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றிற்கு டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில், வரும் ஜனவரில் கட்டுமானப் பணிகள் துவங்கும். அதே ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பணிகள் முடிவடையும் என்று நம்புகிறோம். முதற்கட்டமாக, இரண்டு தளங்கள் கட்டப்பட உள்ளன. இதுதவிர, மாணவ, மாணவியருக்கு தனித்தனி விடுதிகளும் கட்டப்பட உள்ளன. ஜூலை மாதமே புதிய வளாகத்தில் பல்கலைக்கழகம் செயல்படும். தொடர்ந்து அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படும்.


விளையாட்டுப் பல்கலைக்கழகத்திற்கான மைதானம் இல்லாத நிலை தற்போது உள்ளதே?
அதனால் தான், மைதானம் அவசியம் தேவைப்படும் படிப்புகளான பி.பி.எட்., எம்.பி.எட்., படிப்புகளை அடுத்தாண்டு உரிய வசதிகளுடன் துவங்க திட்டமிட்டுள்ளோம். புதிய வளாகத்தில் மைதானத்திற்கு 120 ஏக்கர் நிலம் விடப்படும்.


இப்பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் படிப்புகளுக்கு மாணவர்களிடம் போதிய வரவேற்பு உள்ளதா?
பல்கலைக்கழகம் வழங்கும் முழுநேர படிப்புகளில் 214 மாணவர்களும், தொலைநிலைக் கல்வி முறையில் வழங்கப்படும் படிப்புகளில் 600 மாணவர்களும் படிக்கின்றனர். பி.எச்டி., ஆய்வுக்கு மட்டும் 156 பேர் பதிவு செய்துள்ளனர். தொலைநிலைக் கல்வி முறையில் யோகாவில் வழங்கப்படும் முதுநிலை டிப்ளமோ படிப்பிற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்படிப்பில் மட்டுமே 400 மாணவர்கள் படிக்கின்றனர். விளையாட்டு கருவிகளை தயாரிப்பது குறித்து எம்.டெக். ஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. பி.இ., படித்தவர்கள் மட்டுமே சேர முடியும். எம்.எஸ்சி., இன் கோச்சிங் படிப்பின் மூலம் வாலிபால், புட்பால் போன்ற விளையாட்டுகளில் பயிற்சியாளாராக முடியும். இதுபோன்ற படிப்புகளில் தற்போது மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பினும், மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். புதிய வளாகத்தில் போதிய வசதிகளை மேம்படுத்துவதால், அதிக மாணவர் சேர்க்கை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். உடற்கல்வியியல் குறித்து மாணவர்களிடம் இன்னும் ஆர்வம் மேம்பட வேண்டும்.


பல்கலைக்கழகத்தின் வருங்கால திட்டங்கள் என்ன?
தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய அரசின் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவில் மாணவர்களை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் 12பி அங்கீகாரத்தை பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்மூலம் யு.ஜி.சி.,யின் நிதியுதவியை பெற முடியும். குறைவான கட்டணத்தில் பல்வேறு உடற்கல்வி படிப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஜனவரில் நடைபெற உள்ள பல்கலைக்கழகத்தின் இரண்டாவது பட்டமளிப்பு விழாவில், 231 பேருக்கு பட்டம் வழங்கப்பட உள்ளது.


உடற்கல்வி படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் எப்படி உள்ளன?
பெரும்பாலும் பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியராக இப்படிப்புகள் உதவும். அரசு வேலைவாய்ப்புகளை அதிகளவில் எதிர்பார்க்க முடியாவிட்டாலும், தனியார் உடற்பயிற்சி மையங்களில் (ஜிம்) பயிற்றுநராக செல்லமுடியும். சுயமாக உடற்பயிற்சி மையங்களை துவங்கவும் முடியும்.


இவ்வாறு துணைவேந்தர் வைத்தியநாதன் பதில் அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us