UPDATED : டிச 03, 2009 12:00 AM
ADDED : டிச 03, 2009 05:21 PM
அ நிறம் | அளவு
நவம்பர் 3ம் தேதி கேட் தேர்வுகள் 104 மையங்களில் பிரச்சினை ஏதும் இல்லாமல் நடைபெற்றதாக அகமதாபாத் ஐ.ஐ.எம்., அதிகாரிகள் தெரிவித்தனர். தேர்வு நடைபெறாது என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இரண்டு மையங்களில் தேர்வு நடைபெறவில்லை. மற்ற இடங்களில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அகமதாபாத்தில் ஒரு மையத்தில் மின்சாரத் தடை ஏற்பட்டதை அடுத்து அங்கு ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வந்தது. இதனால் ஏற்பட்ட தடங்கலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.
கேட் தேர்வு மையங்களில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக 8 ஆயிரம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு வேறு தேதிகளில் தேர்வு நடத்தப்படும் என்று அகமதாபாத் ஐ.ஐ.எம்., இயக்குநர் சமீர் பருவா தெரிவித்துள்ளார்.
