தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதன்மை கல்வி அலுவலகங்களில் 2 நேர்முக உதவியாளர்கள் நியமனம்

முதன்மை கல்வி அலுவலகங்களில் 2 நேர்முக உதவியாளர்கள் நியமனம்

முதன்மை கல்வி அலுவலகங்களில் 2 நேர்முக உதவியாளர்கள் நியமனம்


UPDATED : டிச 11, 2009 12:00 AM

ADDED : டிச 11, 2009 09:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2009 12:00 AM ADDED : டிச 11, 2009 09:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் முதன்மை கல்வி அலுவலருக்கு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அந்தஸ்தில் ஒரு நேர்முக உதவியாளர் பணியில் உள்ளார். இவர், தங்களைவிட கீழ்நிலையில் இருக்கும்போது தங்களுக்கு உத்தரவிடுவது குறித்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஈகோ பிரச்னை ஏற்பட்டு பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இதை தவிர்க்க தற்போது தமிழகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் அந்தஸ்தில் தலா ஒரு நேர்முக உதவியாளர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மேல்நிலை நேர்முக உதவியாளர் மேல்நிலை பள்ளிகள் பிரிவையும், உயர்நிலை நேர்முக உதவியாளர் உயர்நிலை பள்ளிகள் பிரிவையும் கவனிப்பார். இன்னும் ஒரிரு தினங்களில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us