UPDATED : ஆக 26, 2011 12:00 AM
ADDED : ஆக 26, 2011 10:32 AM
அ நிறம் | அளவு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வுகள் ஜுலை 30ம் தேதி நடைபெற்றன. நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி உள்ளிட்ட சுமார் 6,700 பணியிடங்களுக்கு தேர்வு நடந்தது.
அந்த தேர்வுக்கான வினாத்தாள் வெளியானதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நூற்றுக்க்ணக்கான மாணவர்கள் கையொப்பமிட்ட புகார் மனு தமிழக முதலமைச்சரிடம் அளிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடந்த குரூப்-2 தேர்வு வினாக்களுக்கான விடைகள் செல்போன் எஸ்எம்எஸ் மூலம் பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தேர்வு தொடங்கி அரை மணி நேரத்துக்குள் அந்த எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்றார்போல சில தேர்வு மையங்களில் செல்போன் அனுமதிக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது என்று மாணவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
