தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/குஜராத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள்

குஜராத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள்

குஜராத்தில் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகள்


UPDATED : ஆக 26, 2011 12:00 AM

ADDED : ஆக 26, 2011 10:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 26, 2011 12:00 AM ADDED : ஆக 26, 2011 10:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்திய மாநிலங்களில் குஜராத் பல்வேறு துறைகளில் முன்னேறி வருவது தெரிந்த விஷயம். ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது, இம்மாநிலம் மருத்துவத் துறையில் மட்டும் பின்தங்கியுள்ளது. இதனால் புதிதாக 9 மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இம்மாநிலத்தில் மொத்தம் 15 மருத்துவக் கல்லூரிகளே (2,230 இடங்கள்) உள்ளன.  ஆனால் ஆந்திராவில் 36 கல்லூரிகள் (4,800 இடங்கள்), கர்நாடகாவில் 39 கல்லூரிகள் (4,625), மகாராஷ்டிராவில் 40 கல்லூரிகளும் (4,600 இடங்கள்), தமிழகத்தில் 38 கல்லூரிகளும் (4,365 இடங்கள்) உள்ளன.

குஜராத் மாநிலத்தை போல, கேரளாவிலும் குறைந்தளவிலான கல்லூரிகளே (23) உள்ளன.  இதனால் குஜராத்தில் மருத்துவப்படிப்பை முடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதையடுத்து ஆண்டுக்கு 3 மருத்துவக்கல்லூரிகள் வீதம் மூன்று ஆண்டுகளில் மொத்தம் ஒன்பது புதிய மருத்துவக்கல்லூரிகளை தொடங்குவதற்கு குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us