தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐ.ஐ.டி.,யில் ஒரே மாதத்தில் 2வது மாணவன் தற்கொலை

ஐ.ஐ.டி.,யில் ஒரே மாதத்தில் 2வது மாணவன் தற்கொலை

ஐ.ஐ.டி.,யில் ஒரே மாதத்தில் 2வது மாணவன் தற்கொலை


UPDATED : அக் 20, 2015 12:00 AM

ADDED : அக் 20, 2015 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 20, 2015 12:00 AM ADDED : அக் 20, 2015 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி.,யில் கேரளாவைச் சேர்ந்த மாணவன், நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஒரே மாதத்தில் இது இரண்டாவது தற்கொலை சம்பவம்.

சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த, செப்., 23ல், எம்.டெக்., 2ம் ஆண்டு படித்த, ஆந்திர மாணவன் நாகேந்திர குமார், ஐ.ஐ.டி. வளாக, தாமிரபரணி விடுதியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுநடந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், மற்றொரு மாணவர் தற்கொலை செய்துள்ளார். கேரளா, கொல்லத்தைச் சேர்ந்தவர் ராகுல்பிரசாத், 23; ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., மெக்கானிக்கல் இன்ஜி., 3ம் ஆண்டு படித்தார். கங்கா விடுதியில், 4வது மாடியில், தனி அறையில் தங்கி படித்தார்.

நேற்று தேர்வு நடந்த நிலையில், ராகுல் அதில் பங்கேற்கவில்லை. அதனால், ராகுலின் நண்பர்கள், நேற்று மதியம் விடுதிக்கு சென்று பார்த்த போது, அவர், மின்விசிறியில்

துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.தகவல் கிடைத்ததும், போலீசார் உடலை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். விசாரணையில், தற்கொலைக்கான கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், ராகுலின் கணினி இயக்கத்திலேயே இருந்தது தெரியவந்தது. சிறிய பெஞ்சின் மீது, புத்தகங்களை அடுக்கி வைத்து, அவற்றின் மீது ஏறி, நைலான் கயிற்றில் துாக்கிட்டது தெரியவந்தது.

தகவலையடுத்து ராகுலின் தந்தை கிரிபிரசாத் நேற்று சென்னை வந்தார். தற்கொலை செய்த ராகுலை, நேற்று முன்தினம் இரவு, 12:௦௦ மணிக்கு, அபுபக்கர் சித்திக் என்ற மாணவன் பார்த்துள்ளார். அவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இதுகுறித்து, ஐ.ஐ.டி., வெளியிட்ட அறிக்கையில், தற்கொலை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. போலீஸ் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம் எனக் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us