தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலைப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!

கலைப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!

கலைப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை!


UPDATED : மே 18, 2016 12:00 AM

ADDED : மே 18, 2016 11:57 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 18, 2016 12:00 AM ADDED : மே 18, 2016 11:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை
: கோவை மாநகராட்சி பள்ளியில்
, கலைப்பிரிவு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். ஆனால், அறிவியல் பிரிவு மாணவர்கள் பின்தங்கியுள்ளனர்.

கோவை மாநகராட்சியில், 16 மேல்நிலைப்பள்ளிகளில், கலைப்பிரிவு மற்றும் அறிவியல் பிரிவுகளில் மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 2 தேர்வு முடிவில், கலைப்பிரிவு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளனர்.

மாநகராட்சி பள்ளிகளில் முதல் ஐந்து இடங்களையும், ஒப்பணக்கார வீதி மேல்நிலைப்பள்ளியின் கலைப்பரிவு மாணவிகளே பிடித்துள்ளனர். மாணவிகள் ஜூனோப்பியா பேகம் (1,158), அனு (1,153), திலகவதி (1,152), ரனோப்பியா பாத்திமா (1,147), உமா மகேஸ்வரி மற்றும் நவ்பியா (1,144) மதிப்பெண் பெற்றுள்ளனர்.

அறிவியல் பிரிவில், ஆர்.எஸ்.புரம் மேற்கு பள்ளி மாணவி காவ்யா (1,138), ஒப்பணக்கார வீதி பள்ளி மாணவி கீர்த்தனா (1,124), ரங்கநாதபுரம் பள்ளி மாணவி லாவண்யா (1,107) மதிப்பெண்கள் பெற்று, முறையே மூன்று இடங்களை பிடித்துள்ளனர். இதனால், அறிவியல் பிரிவு மாணவர்கள், ரேங்க் பட்டியலில் இடம் பெறவில்லை.

மாநகராட்சி பள்ளியில் கலைப்பிரிவு மாணவர்களை காட்டிலும், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன. மாநகராட்சி கமிஷனர் விஜய கார்த்திகேயன், அறிவியல் பிரிவில் ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடத்திலுள்ள மாணவர்களை தேர்வு செய்து, சூப்பர் 30 என்ற திட்டத்தை உருவாக்கி, சிறப்பு பயிற்சி அளித்தார்.

ஆனால், தேர்வு முடிவில், கலைப்பிரிவு மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சாதித்துள்ளனர். அறிவியல் பிரிவு மாணவர்கள் சோதனைக்குள்ளாகி உள்ளனர். கலைப்பிரிவு மாணவர்கள் மாநகராட்சி அளவிலும், பள்ளிகள் அளவிலும் முதலிடத்தை பிடித்துள்ளனர். தேர்வு முடிவுகள் ஆசிரியர்கள் மட்டத்திலும், அதிகாரிகள் மட்டத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், கலைப்பிரிவில், வணிகவியல், பொருளியல், வணிகக்கணிதம், கணக்குப்பதிவியல் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில், வினாத்தாள் எளிதாக இருந்தது. சிறப்பு பயிற்சி பெற்றுள்ளதால், மாணவர்களால் அதிக மதிப்பெண் பெற முடிந்தது. 

அறிவியில் பிரிவில், இயற்பியல், வேதியியல், கணிதம் பாடங்களில், சில வினாக்கள் கடினமாக இருந்தது. இதனால், அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்கவில்லை என்றனர்.

கமிஷனர் விஜய கார்த்திகேயன் கூறுகையில், அறிவியல் பாடங்கள் கடினமாக இருக்கும் என்பதால்தான், அதனை தவிர்த்து, கலைப்பிரிவை அதிகமாக தேர்வு செய்கின்றனர். ஆனால், மருத்துவம், பொறியியல் படிப்புக்கும், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடங்களில் இளங்கலை பட்டம் படிக்கவும், சயின்ஸ் குரூப் படிக்க வேண்டும்.

பல்வேறு சிறப்பு பயிற்சி அளித்தும், அறிவியல் பாடப்பிரிவு மாணவர்கள் பின்தங்கியது குறித்து விசாரித்து, வரும் கல்வி ஆண்டில், தேர்ச்சி சதவீதம், அதிக மதிப்பெண் பெற திட்டமிடப்படும், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us