UPDATED : ஜூலை 06, 2023 12:00 AM
ADDED : ஜூலை 06, 2023 10:05 AM
சென்னை:
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு டி.வி.எஸ்., நிறுவனம் 2 கோடி ரூபாய் நிதியுதவி செய்துள்ளது.தமிழகத்தில் அதிநவீன விளையாட்டு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளை ஏற்படுத்தும் வகையில் பெரு நிறுவனங்களிடம் நிதியுதவி பெறும் வகையில், தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை என்ற அமைப்பை விளையாட்டு துறை துவக்கி உள்ளது. அதன் சார்பில் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்த, விளையாட்டு கருவிகள் உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு பல்வேறு நிறுவனங்களும் தனி நபர்களும் நிதியுதவி செய்து வருகின்றனர். அந்த வகையில் டி.வி.எஸ்., மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுதர்சன் வேணு நேற்று விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதியை சந்தித்து 2 கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.
