தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘அரசு பள்ளி மாணவர்களுக்கு 2010 முதல் சீருடை மாற்றம்’

‘அரசு பள்ளி மாணவர்களுக்கு 2010 முதல் சீருடை மாற்றம்’

‘அரசு பள்ளி மாணவர்களுக்கு 2010 முதல் சீருடை மாற்றம்’


UPDATED : டிச 15, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 15, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனியார் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் சீருடையை, அந்தந்த பள்ளி நிர்வாகங்களே முடிவு செய்கின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவ, மாணவிகளைப் பொறுத்தவரை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே விதமான சீருடையைத் தான் அணிந்து வருகின்றனர்.
அரசு பள்ளி மாணவர்கள் காக்கி நிற பேன்ட் மற்றும் வெள்ளை நிற சட்டையும் சீருடையாக அணிகின்றனர். மாணவிகள், வெள்ளை சட்டையும், நீல நிற ஸ்கர்ட்டும் அணிகின்றனர். அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசே இலவச சீருடையை வழங்குகிறது.
தனியார் பள்ளி மாணவர்களைப் போல் ‘பளீர்’ என்று சீருடை அணிய முடியாத ஏக்கம், அரசு பள்ளி மாணவர்களிடையே இருக்கிறது. காலத்திற்கு ஏற்றார்போல் கலர் சீருடையை கொண்டுவருவது குறித்து, தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது. இதனடிப்படையில் சீருடையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
மாணவர்களின் மன நிலையை அறிந்து, காலத்திற்கு ஏற்ப புதிய சீருடைகளை வழங்க முடிவு செய்துள்ளோம். தற்போது வழங்கப்படும் சீருடையின் கலரை மாற்றி, கலரில் பிளைனாக இல்லாமல் கட்டம் போட்டதாகவோ அல்லது கோடு போட்டதாகவோ வழங்க, பரிசீலனை செய்து வருகிறோம். சீருடையின் தரமும் உயர்த்தப்படும். மாணவிகளுக்கு ‘ஸ்கர்ட்’ வழங்குவதா அல்லது சுரிதார் வழங்குவதா என்பது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்.
அடுத்த கல்வியாண்டுக்கு தேவையான சீருடைகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டு, தயாரிப்பு பணியும் வேகமாக நடந்து வருகிறது. எனவே, புதிய சீருடை மாற்றம் அடுத்த கல்வியாண்டில் அமலுக்கு வராது. 2010-2011ம் கல்வியாண்டில் புதிய சீருடை நடைமுறைக்கு வரும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us