தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இண்ட்கான் - 2011 தேசிய கருத்தரங்கம் துவக்கம்

இண்ட்கான் - 2011 தேசிய கருத்தரங்கம் துவக்கம்

இண்ட்கான் - 2011 தேசிய கருத்தரங்கம் துவக்கம்


UPDATED : மார் 05, 2011 12:00 AM

ADDED : மார் 05, 2011 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2011 12:00 AM ADDED : மார் 05, 2011 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

"மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ள கருத்தரங்கங்கள் உதவுகின்றன&'&' என, அண்ணா பல்கலை பதிவாளர் சண்முகவேல் பேசினார்.


அண்ணா பல்கலையின், "இண்டஸ்ரியல் இன்ஜினியரிங்" துறை மாணவர்களின், "சொசைட்டி ஆப் இண்டஸ்ரியல் இன்ஜினியர்ஸ்"(எஸ்.ஐ.இ.,) அமைப்பின் சார்பில், "இண்ட்கான் 2011" எனும் தேசிய அளவிலான இரண்டு நாள் தொழில் நுட்ப கருத்தரங்கம், பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கியது.


கருத்தரங்கை துவக்கி வைத்து, அண்ணா பல்கலை பதிவாளர் சண்முகவேல் பேசும் போது, "வகுப்பறைகளில், மாணவர்கள் தங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்த பெரும்பாலும் வாய்ப்பு கிடைப்பதில்லை.பல மாணவர்கள் தயக்கத்தின் காரணமாக, பாடம் குறித்த தங்கள் சந்தேகங்களை கேட்பதில்லை.மாணவர்கள் தங்கள் துறை சார்ந்த அறிவை வளர்த்துக் கொள்ளவும், பாடம் தொடர்பான தங்கள் புதிய எண்ணங்களை வெளிப்படுத்தவும், இது போன்ற கருத்தரங்கங்கள் உதவுகின்றன,&'&' என்றார்.


துவக்க விழாவில், "கான்பிடின் சொல்யூசன்ஸ்" நிறுவனத்தின் மூத்த இயக்குனர் மாதவன், இண்டஸ்ரியல் இன்ஜினியரிங் துறை தலைவர் சகாபுதீன், உதவிப் பேராசிரியர் டில்லிபாபு, எஸ்.ஐ.இ., அமைப்பின் தலைவர் மல்லிகா, பொதுச்செயலர் சிபிசுதன், பொருளாளர் பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இக்கருத்தரங்கில், திருவனந்தபுரம், ஐதராபாத், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களைச் சேர்ந்த பொறியியல் பயிலும் மாணவர்கள் 150 பேர் பங்கேற்கின்றனர். 15 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. துறை வல்லுனர்களின் உரை, கண்காட்சி ஆகியவையும் இடம் பெறுகின்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us