தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மதுரை எய்ம்ஸ் பணி 2026ல் நிறைவடையும்: எம்.பி., தகவல்

மதுரை எய்ம்ஸ் பணி 2026ல் நிறைவடையும்: எம்.பி., தகவல்

மதுரை எய்ம்ஸ் பணி 2026ல் நிறைவடையும்: எம்.பி., தகவல்


UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM

ADDED : ஜூலை 17, 2021 09:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 17, 2021 12:00 AM ADDED : ஜூலை 17, 2021 09:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநகர்:
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 2023ல் துவங்கி 2026ல் நிறைவடையும் என மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறினார்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நியமிக்கப்பட்ட 17 பேர் கொண்ட நிர்வாக குழுவினரின் முதல் கூட்டம் தலைவர் கட்டோச்சி தலைமையில் ஆன்லைனில் நடந்தது. 
கூட்டத்தில் பங்கேற்ற மாணிக்கம் தாகூர் எம்.பி., கூறியதாவது:

இந்தியாவில் 16வது எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைவது உறுதி செய்யப் பட்டு உள்ளது. கட்டட பணிகளுக்காக ஜப்பான் நிறுவனத்திடம் ரூ.1678 கோடி கடன் பெற ஒப்பந்தம் போடப்பட்டது. தற்போது ரூ.1978 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதல் தொகை ரூ.300 கோடியை மத்திய அரசு வழங்க உள்ளது.உலக தரத்தில் அமையும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வடிவமைப்பை ஜப்பான் மேற்கொண்டு வருவதால் 2 ஆண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
2023ல் பணிகள் துவங்கப்பட்டு 2026ல் நிறைவடையும். 180 பேராசிரியர்கள், 130 ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.எய்ம்ஸ் மருத்துவமனை கல்லுாரிக்கான 50 மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு துவக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான வகுப்பறை, ஆய்வகம், விடுதி வசதிகள் மதுரை அரசு, தனியார் மருத்துவமனைகளில் இல்லை.
அதனால் சிவகங்கை, தேனி அரசு மருத்துவ கல்லுாரிகளில் இடஒதுக்கீடு செய்வது குறித்து ஒரு மாதத்தில் தமிழக அரசு முடிவெடுக்கும் என தமிழக சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நிலம், நிதி தயாராக உள்ள நிலையில் வடிவமைப்பு வந்தவுடன் பணிகள் துவங்கும். இந்த கூட்டத்தை ஆண்டுக்கு இருமுறை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us