வேளாண்மை பல்கலை மாணவர்கள் 23 பேர், அமெரிக்கா பயணம்
வேளாண்மை பல்கலை மாணவர்கள் 23 பேர், அமெரிக்கா பயணம்
UPDATED : செப் 01, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அங்கு மூன்று வாரங்கள் தங்கியிருந்து அமெரிக்க வேளாண்மை முறையை அறிந்து கொள்கின்றனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, ஐதராபாத்தில் உள்ள ஆந்திரா வேளாண்மை பல்கலை, கர்நாடகா மாநிலத்தில் உள்ள வேளாண்மை அறிவியல் பல்கலை, உத்ராஞ்சசல் மாநிலத்தில் உள்ள ஜி.பி., பந்த் வேளாண்மை பல்கலை ஆகியவை நியூயார்க் நகரிலுள்ள கார்னல் பல்கலையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இதன்படி, இரு பல்கலை இடையே ஆசிரியர் மற்றும் மாணவர் பரிமாற்றம் நடந்து வருகிறது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் எட்டு மாணவர்கள் உட்பட மொத்தம் 23 மாணவர்கள், கார்னல் பல்கலையில் "சர்வதேச வேளாண்மையும், ஊரக மேம்பாடும் என்ற பாடத்தை மூன்று வாரம் படிக்கவுள்ளனர். அங்கு, கார்னல் பல்கலை மாணவர்களுடன் சேர்ந்து பயிற்சி பெறுவர். பின், கார்னல் பல்கலை அருகேயுள்ள வேளாண்மை நிலங்களில் கள ஆய்வு மேற்கொள்வர். அங்குள்ள விவசசாயிகளை சந்தித்து வேளாண்மை முறை பற்றி அறிந்து கொள்வர்.
அமெரிக்காவில் பேசப்படும் ஆங்கிலம் முற்றிலும் மாறுபட்டு இருக்கும் என்பதால், 23 மாணவர்களுக்கும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையில் கடந்த மூன்று நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஆங்கில உச்சசரிப்பு முறை, எழுத்துமுறை, வாசிக்கும் முறை தொடர்பாக விரிவாக பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த மாணவர்கள், செப்.,2ல் கோவையில் இருந்து மும்பை செல்கின்றனர். பின், அங்கிருந்து நியூயார்க் செல்கின்றனர். இவர்கள் கார்னல் பல்கலை சென்று வர ஆகும் செலவை டாடா நிறுவனம், கார்னல், சத்குரு பவுண்டேஷன் ஆகியவை ஏற்றுக்கொள்கின்றன. கார்னல் பல்கலை மாணவர்கள், 2009 ஜனவரி மாதம் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கு வரவுள்ளனர்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் முதுநிலை படிப்புகளுக்கான டீன் சசந்திரபாபு கூறுகையில், இந்தியாவில் உள்ள நான்கு வேளாண்மை பல்கலை மற்றும் கார்னல் பல்கலை இடையே செய்யப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, 23 மாணவர்கள் அமெரிக்கா செல்கின்றனர். இவர்கள், அமெரிக்க வேளாண் முறையை தெரிந்து கொள்வதுடன், கார்னல் பல்கலையில் இரண்டு பாடங்களையும் படிக்கவுள்ளனர் என்றார்.

