sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மனிதநேயம் அறக்கட்டளையில் படித்த 24 பேர் ஐ.எப்.எஸ்., பணிக்கு தேர்வு

மனிதநேயம் அறக்கட்டளையில் படித்த 24 பேர் ஐ.எப்.எஸ்., பணிக்கு தேர்வு

மனிதநேயம் அறக்கட்டளையில் படித்த 24 பேர் ஐ.எப்.எஸ்., பணிக்கு தேர்வு


UPDATED : பிப் 26, 2026 02:44 PM

ADDED : பிப் 26, 2026 02:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 26, 2026 02:44 PM ADDED : பிப் 26, 2026 02:46 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இந்திய வன அலுவலர் பணிக்கு நடத்தப்பட்ட முதன்மை தேர்வில், மனிதநேய பயற்சி மையத்தில் படித்த, 24 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக, சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:


மத்திய அரசு தேர்வாணையம் கடந்தாண்டு, 150 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. இதற்கான முதல்நிலை தேர்வு, கடந்தாண்டு மே 25ல் நடந்தது. இதன் முடிவுகள் ஜூன் 11ல் வெளியானது. முதன்மை தேர்வு நவம்பரில் நடந்தது. இதன் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் தேர்வு எழுதிய, 24 மாணவர்கள், மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., கல்வியகத்தின் இணைய வழியில் பதிவு செய்து, இலவசமாக படித்து நேர்முக தேர்வில் பங்கேற்கின்றனர்.

இவர்களுக்கு மாதிரி நேர்முக தேர்வு பயிற்சி, டில்லி சென்று வருவதற்கான விமான டிக்கெட் உள்ளிட்ட அனைத்து உதவிகளும் இலவசமாக வழங்கப்படும்.

பயிற்சியில் பங்கேற்க விரும்பும், தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு போட்டோ, முதன்மை தேர்வு நுழைவு சீட்டு ஆகியவற்றுடன், சி.ஐ.டி., நகரில் உள்ள மனிதநேயம் ஐ.ஏ.எஸ்., இலவச பயிற்சி மையத்திற்கு இன்று நேரில் வரலாம்.

மேலும், mntfreeias.com என்ற இணையதளம் மற்றும் 044 - 2435 8373, 98404 39393, 84284 31107 ஆகிய எண்களை தொடர்பு கொண்டும் பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us