UPDATED : நவ 18, 2009 12:00 AM
ADDED : நவ 18, 2009 01:09 PM
அ நிறம் | அளவு
பாரதியார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது என்று பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: கோவையில் நடைபெறவுள்ள தமிழ் செம்மொழி மாநாடு சிறப்பாக நடைபெற, பாரதியார் பல்கலையின் பங்கு அதிகமாக இருக்கும். இதற்கு இங்குள்ள கல்வியாளர்களால் திட்டமிட, வரும் 24ல் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில், பாரதியார் பல்கலை, கோவை அண்ணா பல்கலைகளின் கீழ் உள்ள கல்லூரி முதல்வர்கள், நிர்வாகிகள் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கவுள்ளனர்.
மாநாட்டுக்கு வருகை தரும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு தங்குமிட வசதி, போக்குவரத்து, உணவு உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்றுக் கொள்வது பற்றி பல்கலை ஆலோசித்து வருகிறது. பல்கலையில் இதற்கென பல கமிட்டிகள் அமைக்கப்படும். கொங்குத் தமிழ் எனும் கருத்தை மையமாக கொண்டு தமிழ் மாநாட்டை சிறப்பிக்க, தமிழ் துறையில் தனிக் கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணத்துக்காக நன்னூலுக்குப் பின், தமிழில் சிறந்த நூல் இல்லாத குறையை, பூர்த்தி செய்யும் திட்டங்களை ஆலோசித்து வருகிறோம் என்றார்.
