தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு மருத்துவ கல்லூரிகள் 260 ஆக உயர்வு மத்திய அமைச்சர்

அரசு மருத்துவ கல்லூரிகள் 260 ஆக உயர்வு மத்திய அமைச்சர்

அரசு மருத்துவ கல்லூரிகள் 260 ஆக உயர்வு மத்திய அமைச்சர்


UPDATED : செப் 03, 2023 12:00 AM

ADDED : செப் 03, 2023 01:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 03, 2023 12:00 AM ADDED : செப் 03, 2023 01:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
கடந்த ஒன்பது ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ்., மருத்துவ இளநிலை படிப்பு 79 சதவீதம் அதிகரித்துள்ளது என்று, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் அறக்கட்டளையின் 10வது ஆண்டு விழாவில், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரியில், 1972-75ம் ஆண்டு பேட்ச் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.நிகழ்ச்சியில் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளின் எண்ணிக்கை கடந்த ஒன்பது ஆண்டுகளில் 145ல் இருந்து, 260 ஆக அதிகரித்து உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின் கீழ், புதிதாக 22 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 19 எய்ம்ஸ் மருத்துவமனை கல்லுாரிகளில் இளங்கலை படிப்புகள் துவங்கப்பட்டுள்ளன. கடந்த 2014ம் ஆண்டில் 51,348 ஆக இருந்த எம்.பி.பி.எஸ்., இளநிலை படிப்பு இடங்களின் எண்ணிக்கை, தற்போது 91,927 இடங்களாக அதிகரித்துள்ளது. இது, 79 சதவீத உயர்வு.முதுநிலை படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2014ல், 31,185 இடங்களாக இருந்தது. தற்போது 93 சதவீதம் அதிகரித்து 60,202 இடங்களாக அதிகரித்துள்ளது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி மற்றும் பெங்காலி உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை வழங்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். ஹிந்தி மொழியில் மருத்துவக் கல்வி ஏற்கனவே துவங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பொறியியல் படிப்புகளும் இம்மொழியில் துவக்கப்படும்.வரும் காலங்களில், நாடு முழுதும் உள்ள மாணவர்கள் தங்கள் தாய்மொழியில் தொழில்நுட்ப மற்றும் மருத்துவக் கல்வியை பெற முடியும். கொரோனா நோய் தொற்று காலத்தில், ஆயுர்வேதம், ஹோமியோபதி, யுனானி, யோகா, இயற்கை மருத்துவம் உள்ளிட்டவற்றின் எழுச்சியால், மேற்கத்திய நாடுகள் கூட இந்தியாவை உற்று பார்க்க துவங்கி உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us