தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.டெக்., தேர்வில் முறைகேடு: 28 அலைபேசிகள் பறிமுதல்

பி.டெக்., தேர்வில் முறைகேடு: 28 அலைபேசிகள் பறிமுதல்

பி.டெக்., தேர்வில் முறைகேடு: 28 அலைபேசிகள் பறிமுதல்


UPDATED : அக் 28, 2020 12:00 AM

ADDED : அக் 28, 2020 08:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 28, 2020 12:00 AM ADDED : அக் 28, 2020 08:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் உள்ளது.இங்கு, கேரள தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், பி.,டெக் மூன்றாமாண்டு மாணவர்களுக்கான கணித தேர்வு, சமீபத்தில் நடந்தது.
இதில், சில கல்லுாரிகளில் மாணவர்கள், அலைபேசிகளுடன் தேர்வில் பங்கேற்றதுடன், &'வாட்ஸ் ஆப்&' குழுவில் இணைந்து விடைகளை பகிர்ந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து விசாரணை நடந்தது. அப்போது, நான்கு கல்லுாரிகளைச் சேர்ந்த, 28 மாணவர்கள் அலைபேசிகளுடன் தேர்வில் பங்கேற்றது தெரியவந்தது. அவர்கள் பயன்படுத்திய, 28 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் சேவைகள் முடக்கப்பட்டன. மொபைல் போனில், வாட்ஸ் ஆப் குழு உருவாக்கி, 75 மதிப்பெண்கள் வரையிலான விடைகளை, அவர்கள் பகிர்ந்து உள்ளனர்.
தேர்வு கண்காணிப்பாளரை ஏமாற்றுவதற்காக, தேர்வு மையத்துக்கு வெளியே ஒரு மொபைல் போனை வைத்துவிட்டு, மற்றொரு போனுடன் தேர்வில் பங்கேற்றுள்ளனர். மேலும், ஒரு தேர்வு மையத்தில், கண்காணிப்பாளரை மிரட்டி, அவர் பறிமுதல் செய்த அலைபேசியை திரும்ப பெற்றுள்ளனர்.
இந்த உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, சம்பந்தப்பட்ட கணித தேர்வு ரத்து செய்ய பட்டது. இதற்கிடையே, இதுபோன்ற முறைகேடுகள் மேலும் பல கல்லுாரிகளில், பல்வேறு தேர்வுகளிலும் நடந்து உள்ளதாக, மாணவர்கள்தரப்பில் புகார் எழுந்து உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us