தனியார் பல்கலை துவங்கும் முடிவை பரிசீலனை செய்ய கோரிக்கை
தனியார் பல்கலை துவங்கும் முடிவை பரிசீலனை செய்ய கோரிக்கை
UPDATED : அக் 28, 2020 12:00 AM
ADDED : அக் 28, 2020 08:23 AM
புதுச்சேரியில் தனியார் பல்கலை துவங்குவதற்கான அமைச்சரவை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாணவர் பெற்றோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சங்க தலைவர் பாலா விடுத்துள்ள அறிக்கை:
அமைச்சரவை கூட்டத்தில், மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் புதிதாக அமைக்க ஒப்புதல் அளிக்க பரிசீலிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புதுச்சேரி அரசின் தடையில்லா சான்றிதழ் பெற்று துவங்கப்பட்ட தனியார் மருத்துவ கல்லுாரிகள், சில ஆண்டுகளுக்குள் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாக மாற்றப்பட்டு, புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு குறிப்பாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் எவ்வித இட ஒதுக்கீடும் வழங்கவில்லை. எனவே புதுச்சேரியில் தனியார் பல்கலைக்கழகம் துவங்குவதற்கான அமைச்சரவை முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
