தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தங்கத்தில் தகதகக்கும் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர்!

தங்கத்தில் தகதகக்கும் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர்!

தங்கத்தில் தகதகக்கும் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர்!


UPDATED : ஆக 28, 2023 12:00 AM

ADDED : ஆக 28, 2023 07:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2023 12:00 AM ADDED : ஆக 28, 2023 07:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
சந்திராயன் 3 வெற்றியை உலக நாடுகள் வியந்து பார்த்து, இந்தியாவை பாராட்டி வருகிறது. மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.கோவை செட்டி வீதி அசோக் நகரை சேர்ந்த நகை பட்டறை தொழிலாளி மாரியப்பனோ 42, சந்திராயன்3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை, 4 கிராம் தங்கத்தில் உருவாக்கி அசத்தி உள்ளார். உலகமே வியக்கும் வகையில், சரித்திர சாதனை படைத்துள்ள சந்திராயன் 3 விண்கலத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில், விக்ரம் லேண்டரின் உருவத்தை, 4 கிராம் தங்கத்தில் உருவாக்கி உள்ளேன்.அந்த விக்ரம் லேண்டருக்கு மேல் பகுதியில், நம் தேசியக்கொடியையும் வரைந்துள்ளேன். அத்துடன் மேல் பகுதியில் எல்.இ.டி., விளக்கு, அடிப்பகுதியில் பேட்டரியில் இயங்கும் சிறிய மின்விசிறியும், விக்ரம் லேண்டரின் நான்கு கால்களும் என, இரண்டு நாளில் விக்ரம் லேண்டரை உருவாக்கி வடிவமைத்து உள்ளேன் என்றார். இந்த விக்ரம் லேண்டரை பொதுமக்கள் கூடும் இடங்களில் சென்று காண்பித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார் இவர். அடுத்ததாக, தங்கத்தில் ரயில் பெட்டிகள் ஓடும் வகையில் வடிவமைக்க திட்டமிட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us