தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிற்கல்வி பாடப்பிரிவில் மேலும் 3 பாடங்கள் சேர்ப்பு

தொழிற்கல்வி பாடப்பிரிவில் மேலும் 3 பாடங்கள் சேர்ப்பு

தொழிற்கல்வி பாடப்பிரிவில் மேலும் 3 பாடங்கள் சேர்ப்பு


UPDATED : ஜன 31, 2010 12:00 AM

ADDED : ஜன 31, 2010 05:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2010 12:00 AM ADDED : ஜன 31, 2010 05:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் ப்ளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளுடன் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளும் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இதில் பயிர் உற்பத்தி, பில்டிங் மேனேஜ்மென்ட், டெக்ஸ்டைல் டெக்னாலஜி உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகள் உள்ளன.

ஒரு சில பிரிவுகள் தமிழகத்திலேயே ஒரிரு பள்ளிகளில் மட்டுமே காணப்படும் நிலையும் இருந்தது. இதற்காக தனியே கேள்வித்தாள் அமைப்பது, பாடப்புத்தகம் தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு கூடுதல் பணிகள் இருந்ததால், இவற்றை வரும் கல்வியாண்டில் மாற்றியமைத்து, அவற்றின் எண்ணிக்கையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் தொழிற்கல்வி பிரிவில் ஒன்பது பாடப்பிரிவுகள் புதிதாக அமைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன. இதில் ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரிகல் மெஷின்ஸ் அண்டு அப்ளைன்சஸ், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட்ஸ், டிராப்ட்ஸ்மேன் சிவில், டெக்ஸ்டைல் அண்டு டிரஸ் டிசைனிங், அக்ரிகல்சரல் பிராக்டிசஸ், ஃபுட் மேனேஜ்மென்ட் அண்டு சைல்டு கேர், நர்ஸிங், ஆபிஸ் செக்ரட்டரி ஆகிய பாடங்களுக்கான புத்தக தேவைகளும் பள்ளிகளில் கேட்கப்பட்டிருந்தன.

தற்போது இதில் மேலும் மூன்று பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அக்கவுண்டன்ஸி அண்டு ஆடிட்டிங், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி ஆகிய பாட பிரிவுகளுக்கும் புத்தக தேவை குறித்து பள்ளிகளில் விவரம் கேட்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 12 தொழிற்கல்வி பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே பள்ளிகளில் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us