இடைநிலை ஆசிரியர்: ஜூலை 31க்கு பிறகு மாணவர் சேர்க்கை செல்லாது!
இடைநிலை ஆசிரியர்: ஜூலை 31க்கு பிறகு மாணவர் சேர்க்கை செல்லாது!
UPDATED : செப் 02, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
இத்தகவலை ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் வெளியிட்டுள்ளது
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தேசிய ஆசிரியர் கல்விக் குழு அங்கீகாரம் மற்றும் தமிழக அரசு ஆசிரியர் கல்வித்துறையிடமிருந்து ஒப்புதல் பெற்ற 655 சுயநிதி ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் 22 பள்ளிகள் நீங்கலாக 633 ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில் ஜூலை 31ம் தேதிக்குள் சேர்க்கப்பட்ட மாணவர் சேர்க்கைப் பட்டியலுக்கு ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் பிறகு சேர்க்கப்படும் மாணவர்களுக்கு இந்த இயக்ககத்தின் ஒப்புதலைப் பெற தகுதியில்லை. அந்த மாணவர்கள் தேர்வு எழுதவும் அனுமதிக்கப்படமாட்டார்கள்.
எனவே, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி கேட்டுக் கொள்கிறார்கள் என்று ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
இயக்குநர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் மாணவர் சேர்க்கை குறித்து ஏதேனும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் விளம்பரம் செய்தால் அதுகுறித்து மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர்களுக்குத் தகவல் தெரிவிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

