UPDATED : ஏப் 20, 2024 12:00 AM
ADDED : ஏப் 20, 2024 11:12 AM
கோவை:
தேசிய அளவிலான சிலம்பப்போட்டியில், கோவையை சேர்ந்த மாணவர்கள், 31 பதக்கங்கள் வென்றனர்.
அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில், 20வது தேசிய சிலம்ப போட்டி, கன்னியாகுமரி சி.எஸ்.ஐ.,அரங்கில் நடந்தது.
சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகியோருக்கு கம்பு வீச்சு, கம்பு ஜோடி, கம்பு சண்டை, இரட்டைவால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்ற கோவை சிலம்பாலயா மற்றும் இம்மார்ட்டல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவர்கள், 17 தங்கம், 9 வெள்ளி, 5 வெண்கலம் என, 31 பதக்கங்கள் வென்றனர்.
வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள்:
மினி சப் ஜூனியர் மாணவியர் பிரிவு: நேகா - தங்கம், வெண்கலம்; ஹன்சிகா - தங்கம்; ஜாக்குலின் - தங்கம்; தன்யஸ்ரீ - வெள்ளி; ஹரினி - தங்கம்
மாணவர்கள் பிரிவு: ரக்சன் - தங்கம்; பிரணேஷ் - வெள்ளி, வெண்கலம்; சஸ்வந்த் - தங்கம், வெண்கலம்; நிஷ்வந்த் - வெண்கலம்; பிரேம்சாய் - தங்கம்; யுவதர்சன் - தங்கம், அம்ரிஷ் விநாயக் - வெண்கலம்; ஜோ அர்னவ் - தங்கம்; பிரணீத் ஸ்கந்தா - தங்கம்.
சப் ஜூனியர் மாணவியர் பிரிவு: நேத்ரா ஸ்ரீ - 2 தங்கம்; இனியா - தங்கம்; சரித்திரா - வெண்கலம்; ஹரிணி - வெண்கலம்; சார்விகா - வெண்கலம்; கார்னிகா - வெள்ளி
மாணவர் பிரிவு: சரண் - தங்கம், ராகுல் - 2 தங்கம், சஞ்ஜித் - வெண்கலம்.
ஜூனியர் மாணவர்கள் பிரிவு: தரணிதரன் - தங்கம், பிரணவ் - வெள்ளி.
வெற்றி பெற்றவர்களை சிலம்பாலயா தலைமை ஆசிரியர் செல்வக்குமார், பயிற்சியாளர்கள் சரண்ராஜ், ரஞ்சித்குமார், அருண்பாண்டியன் வாழ்த்தினர்.