தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதை இல்லா கோவை; 33 கல்வி நிறுவனங்களில் 'பாடம்'

போதை இல்லா கோவை; 33 கல்வி நிறுவனங்களில் 'பாடம்'

போதை இல்லா கோவை; 33 கல்வி நிறுவனங்களில் 'பாடம்'


UPDATED : ஆக 06, 2026 10:24 AM

ADDED : ஆக 06, 2026 10:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2026 10:24 AM ADDED : ஆக 06, 2026 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை:
போதைப்பொருட்கள் பயன்படுத்தும் மாணவர்களை கண்டறிய சமீபத்தில், பல் பரிசோதனை செய்யும் திட்டம் துவங்கப்பட்டது.

வாய், பற்களில் போதைப்பொருள் பயன்படுத்திய அறிகுறி இருந்தால், அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கி இப்பழகத்தில் இருந்து மீட்கப்படுவர்.

என்ன வகையான போதைப்பொருள், அதை யாரிடம் பெறுகிறார்கள், எங்கிருந்து வினியாகிக்கப்படுகிறது, நெட்வொர்க் குறித்த விபரங்கள் திரட்டி சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இத்துடன் மாவட்ட புகையிலை, போதைபொருள் தடுப்பு மையம் சார்பிலும், பள்ளி, கல்லுாரிகளில் போதை விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்படுகிறது. கடந்த மாதம் 33 கல்வி நிறுவனங்களில், மாணவர்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட புகையிலை போதைபொருள் தடுப்பு மைய அலுவலர் சரண்யா கூறுகையில், “போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள், தனிமனித, சமூக சீரழிவுகள் குறித்து விளக்கி வருகிறோம். வரும் 11ம் தேதி, அனைத்து பள்ளி, கல்லுாரிகளில், போதைக்கு எதிரான உறுதிமொழி ஏற்கப்படும். தொடர் முயற்சிகளால் மட்டுமே, மாணவர்கள் மத்தியில் இப்பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க முடியும்,” என்றார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us