பாங்க் ஆப் அமெரிக்காவில் 35 ஆயிரம் பேருக்கு வேலை காலி
பாங்க் ஆப் அமெரிக்காவில் 35 ஆயிரம் பேருக்கு வேலை காலி
UPDATED : டிச 16, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அடுத்த மூன்று ஆண்டுகளில், 35 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது. அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, மெரில் லிஞ்ச் வங்கி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த செப்டம்பரில் மெரில் லிஞ்ச் வங்கி, பாங்க் ஆப் அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. இந்த இணைப்புக்கு, பங்குதாரர்கள் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தனர்.
இந்த வங்கிகளுக்கு உலகம் முழுவதும் உள்ள கிளைகளில் ஏராளமான ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பாங்க் ஆப் அமெரிக்காவுக்கு ஐரோப்பாவில் மட்டும் 2,600 பேர் பணியாற்றுகின்றனர். மெரில் லிஞ்ச் வங்கிக்காக அமெரிக்காவுக்கு வெளியில் மட்டும் 15 ஆயிரத்து 500 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தற்போது, சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக அடுத்த மூன்று ஆண்டுகளில், 35 ஆயிரம் பேரை வேலையை விட்டு நீக்க பாங்க் ஆப் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இருந்தாலும், இது பற்றிய உறுதியான தகவல்களை தெரிவிக்க வங்கி நிர்வாகம் மறுத்து விட்டது.
