UPDATED : ஜன 23, 2025 12:00 AM
ADDED : ஜன 23, 2025 12:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
அரசு தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப் - 4 தேர்வில் வெற்றி பெற்றோருக்கான கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு துவங்கியது.
கடந்தாண்டு நடந்த டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வை, 15.88 லட்சம் பேர் எழுதினர். அவர்களுக்கான தேர்வு முடிவுகள், அக்டோபரில் வெளியாகின.
தற்போதைய நிலவரப்படி, 10,000க்கும் அதிகமான காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், தேர்வர்களுக்கான கலந்தாய்வு மற்றும் நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு, சென்னை, வ.உ.சி., நகரில் உள்ள அலுவலகத்தில் துவங்கியது. இதில், 400 பேர் பங்கேற்றனர். இந்த கலந்தாய்வு, இன்னும் ஒரு மாதத்துக்கு நடக்கும்.