ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்காத 40 ஆயிரம் இந்திய மாணவர்கள்!
ஆஸ்திரேலியாவில் வேலை கிடைக்காத 40 ஆயிரம் இந்திய மாணவர்கள்!
UPDATED : டிச 04, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாநிலத்தில் 40 ஆயிரம் இந்திய மாணவர்கள் தகவல் தொடர்புத்திறன் இல்லாததால் வேலைவாய்ப்புகளைப் பெற முடியாத நிலையில் உள்ளதாக மெல்போர்ன் நகரில் உள்ள இந்திய தூதர் அனிதா நாயர் தெரிவித்துள்ளார்.
இந்தோ-ஆஸ்திரேலிய வர்த்தக சபை சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்திய மாணவர்கள் பெரும்பாலும் திறன் குறைந்த வேலைகளிலேயே சேரும் நிலை உள்ளது என்றார். ஆஸ்திரேலியாவில் படிக்க வேண்டும் என்பதற்காக இந்திய மாணவர்கள் முக்கியத்துவம் அல்லாத படிப்புகளில் சேர்ந்து படிக்கிறார்கள் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
கல்வியில் கூட்டுறவுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. விக்டோரியா மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களும் தொழில் பயிற்சி இன்ஸ்டிட்யூட்டுகளும் இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் கூட்டு முயற்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன. விக்டோரியாவில் சாப்ட்வேர் துறையுடன் இந்தியா நின்று விடுகிறது. மெல்போர்ன் மற்றும் விக்டோரியாவில் இந்திய உணவகங்களுக்கு நல்ல டிமாண்ட் இருக்கிறது. ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, புட் புராசசிங், கட்டுமானம், சுற்றுச்சூழல் மற்றும் தூய தொழில்நுட்பம் போன்ற துறைகளில் விக்டோரியா மாநிலத்தின் நிபுணத்துவத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றார் அனிதா நாயர்.
