தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளி மாணவர்கள் 46,216 பேர் நீட் இலவச பயிற்சிக்கு ஆர்வம்

அரசு பள்ளி மாணவர்கள் 46,216 பேர் நீட் இலவச பயிற்சிக்கு ஆர்வம்

அரசு பள்ளி மாணவர்கள் 46,216 பேர் நீட் இலவச பயிற்சிக்கு ஆர்வம்


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர, நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம். அதேபோல், ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.இந்தாண்டு நீட் தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர, அரசு பள்ளி மாணவர்கள், 46,216 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு, தமிழக பள்ளிக்கல்வி துறையின் சார்பில், நீட் இலவச பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஜே.இ.இ., தேர்வு பயிற்சிக்கு, 29,279 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் மற்றும் ஜே.இ.இ., ஆகிய, 2 தேர்வுகளையும் எழுத, 31,730 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.ஆனால், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, தமிழக அரசு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரி, ஆளும் தி.மு.க., சார்பில், கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது.  இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்கள், 46,000த்துக்கும் மேற்பட்டோர், நீட் தேர்வு எழுத ஆர்வம் தெரிவித்து, அரசின் இலவச பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us