தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு

கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு

கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வங்கிக்கு நுகர்வோர் கோர்ட் உத்தரவு


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 09:38 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 09:38 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
கல்விக் கடன், 4.80 லட்சம் ரூபாயை தள்ளுபடி செய்ய வேண்டும் என மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், சூரமங்கலம் இளையப்ப நகரை சேர்ந்தவர் இளங்கோவன் மகன் முருகபிரகாஷ், 36. இவர், அமெரிக்காவில் விமான பயிற்சி படிப்பை படிப்பதற்காக, நாமக்கல்லில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில், 2007ல், 15 லட்சம் ரூபாய் கடன் பெற்றார். அதற்காக, அவரது தாத்தா பெயரில் உள்ள வீட்டை அடமானமாக கொடுத்துள்ளார். படிப்பை முடித்து ஓராண்டுக்கு பின், அல்லது வேலை கிடைத்த ஆறு மாதத்துக்கு பின், 120 மாதங்களுக்கு மாதம், 20 ஆயிரம் ரூபாய் வீதம் கடனை திரும்ப செலுத்த வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இதுவரை, 36.50 லட்சம் ரூபாய் வங்கிக்கு செலுத்தியுள்ளார்.கூடுதலாக வட்டியை கணக்கிட்டு, 4 லட்சத்து, 80 ஆயிரத்து, 559 ரூபாய் செலுத்த வேண்டும் என, வங்கி நிர்வாகம் கேட்டது. கடன் வாங்கும் போது, இன்சூரன்ஸ் பாலிசிக்காக, 13 ஆயிரத்து ஐந்து ரூபாய் செலுத்தி உள்ளார். ஆனால், இன்சூரன்ஸ் பாலிசியை வங்கி வழங்கவில்லை. வங்கியின் இத்தகைய செயல்கள் நேர்மையற்ற வர்த்தக நடைமுறை என கூறி கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை. ஐந்து லட்சத்து, 72 ஆயிரத்து, 272 ரூபாய் மற்றும் இழப்பீடாக, ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என, 2019ல் வங்கி மீது நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், முருகபிரகாஷ் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு விசாரணை நேற்று முடிந்தது.இதையடுத்து, நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், 10 ஆண்டுக்கான இன்சூரன்ஸ் பணம் பெற்றுக் கொண்டு, இரண்டு ஆண்டுகளில் வங்கி அதை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளது. இன்சூரன்ஸ் பணம் செலுத்தியவருக்கு அறிவிப்பு தராமல், பாலிசியை வாபஸ் பெற்றுக் கொண்டதும், இன்சூரன்ஸ் செய்ததற்கான எந்த ஆவணத்தையும் வழங்காததும், வங்கியின் சேவை குறைபாடாகும்.வங்கியின் சேவை குறைபாட்டிற்காக, கடன் பெற்றவர் செலுத்த வேண்டியதாக கூறப்படும், 4 லட்சத்து, 80 ஆயிரத்து, 559 ரூபாயை வங்கி தள்ளுபடி செய்து, வழக்கு தாக்கல் செய்தவர் தரப்பில் அடமானம் வைத்த சொத்துக்களின் அசல் ஆவணங்களை, நான்கு வாரங்களுக்குள் திரும்ப வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us