தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காடுகளை அதிகரிக்க பறவைகளை பாதுகாத்தலே அவசியம்!

காடுகளை அதிகரிக்க பறவைகளை பாதுகாத்தலே அவசியம்!

காடுகளை அதிகரிக்க பறவைகளை பாதுகாத்தலே அவசியம்!


UPDATED : நவ 15, 2023 12:00 AM

ADDED : நவ 15, 2023 05:30 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 15, 2023 12:00 AM ADDED : நவ 15, 2023 05:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:
காடுகளை அதிகரிக்க பறவைகளை பாதுகாத்தலே அவசியம் என வரலாறு பறவைகள் ஆய்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் தலைமை ஆசிரியர் கலைச்செல்வன் தெரிவித்தார்.சேலம் மாவட்டம் மின்னாம்பள்ளி, செல்லியம்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வன், 41. இவர், 21 ஆண்டுகளாக அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார். தற்போது வாழப்பாடி, துக்கியாம்பாளையம், மாரியம்மன்புதுார் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக உள்ளார். இவருக்கு, 2018ல், கனவு ஆசிரியர் விருது, 2022ல் மாநில அளவில், நல்லாசிரியர் விருதை, தமிழக அரசு வழங்கி கவுரவித்துள்ளது.சேலத்தின் பெருமை, வரலாற்றை அறிய, 10 ஆண்டுகளாக கல்வெட்டு, நடுகல் போன்றவை குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதனுடன் பறவைகள், அரியவகை பறவைகளை தனியாகவும், குழுவினருடன் இணைந்து கண்டறிவது, அவற்றை பதிவிடுவதில் ஆர்வம் காட்டுகிறார்.கலைச்செல்வன் கூறியதாவது:
பழங்கால வரலாற்று நுால்கள், ஆங்கிலேயர் ஆட்சியில் பதிவிட்ட விபரங்களை படித்தபோது, சேலத்தின் பெருமைகளை ஆய்வு செய்து அவற்றை ஆதாரங்களுடன் வெளிப்படுத்தவும், மாணவர்களுக்கு பாடங்கள் நடத்துவதற்கும், பதிவிடாத நடுகல், கல்வெட்டுகளை ஆய்வு செய்ய ஆர்வம் வந்தது. சேர்வராயன், கல்வராயன்மலையில் பெருங்கற்காலம், புது கற்காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் வரலாறுகள் உள்பட, 30 கல்வெட்டு, நடுகல் கண்டறிந்தேன்.நீர்முள்ளிக்குட்டையில், 9ம் நுாற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால நடுகல், வட்டெழுத்துகளுடன் இருந்தது தெரிந்தது.உலகளவில் பறவைகள், மற்ற உயிரினங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதன் காரணத்தை அறிய பறவைகள் குறித்து ஆய்வு செய்கிறேன். &'இந்திய பறவைகளின் நிலை&' அறிக்கை, 2020ல் வெளியானது. இதையடுத்து நான், 240 வகை பறவைகளை தனியே கண்டறிந்து, அதற்கான அரசு சார்பிலான இணையதளத்தில் பதிவிட்டுள்ளேன்.மேட்டூர், பண்ணவாடி பறவைகளின் வாழ்விடமாக உள்ளது. சேலத்தில் மூக்கனேரி, குமரகிரி ஏரி; ஆத்துார் புது ஏரி, தலைவாசல் அருகே மணிவிழுந்தான் ஏரி பகுதிகளில் அதிகளவில் பறவைகள் வந்து செல்கின்றன. பண்ணவாடியில் தண்ணீர் குறையும்போது, 100 வகை பறவைகள் வருகின்றன. சேலம் பறவையியல் கழகம், 300க்கும் மேற்பட்ட பறவைகளை கண்டறிந்துள்ளன.வரலாறு, பறவைகள் ஆய்வுகளுக்கு மாணவர்களை அழைத்துச்சென்று கற்றுத்தருகிறேன். அதற்கு, 96553 00204 என்ற எண்ணில் அழைக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us