UPDATED : ஜூலை 27, 2023 12:00 AM
ADDED : ஜூலை 27, 2023 05:17 PM
அ நிறம் | அளவு
ஆலந்துார்:
சென்னை, ஆலந்துாரில் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்கி வருகிறது.அதன் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில், மாணவ - மாணவியரை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் ஆய்வு செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் முத்து உத்தரவின்படி, ஆர்.டி.ஓ., சுந்தரமூர்த்தி தலைமையில், நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 20க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டன. பள்ளி விதிமுறைகள் மீறி, முதலுதவிப் பெட்டி இல்லாதது, பொதுப் பயன்பாட்டு வாகனத்தில் மாணவர்களை ஏற்றியது உள்ளிட்ட காரணங்களால், ஐந்து வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன. 60,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
