தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆங்கில தேர்வில் "பிட்": 50 மாணவர் பிடிபட்டனர்

ஆங்கில தேர்வில் "பிட்": 50 மாணவர் பிடிபட்டனர்

ஆங்கில தேர்வில் "பிட்": 50 மாணவர் பிடிபட்டனர்


UPDATED : ஏப் 02, 2013 12:00 AM

ADDED : ஏப் 02, 2013 07:36 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 02, 2013 12:00 AM ADDED : ஏப் 02, 2013 07:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, நேற்று நடந்த ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், "பிட்" அடித்ததாக, 50 மாணவர்கள், பறக்கும்படை குழுவினரிடம் பிடிபட்டனர்.

ஏற்கனவே நடந்த தமிழ் முதற்தாள் தேர்வில், 26 பேரும், இரண்டாம் தாள் தேர்வில், 26 பேரும் பிடிபட்டிருந்தனர். இந்நிலையில், நேற்று நடந்த ஆங்கிலம் முதற்தாள் தேர்வில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில், தலா ஒரு மாணவர்; கடலூர் மாவட்டத்தில், இரு மாணவர்; காஞ்சிபுரம் மாவட்டத்தில், மூன்று மாணவர் பிடிபட்டனர்.

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும், 39 மாணவர்கள், பறக்கும்படை குழுவினரிடம் பிடிபட்டனர். இவர்களில், ஒரு மாணவர், பள்ளியைச் சேர்ந்தவர். மற்ற 38 பேரும், தனித்தேர்வு மாணவர்கள் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. மூன்று தேர்வுகளிலும் சேர்த்து மொத்தம் 102 பேர், சிக்கி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us