UPDATED : டிச 15, 2025 07:16 AM
ADDED : டிச 15, 2025 07:52 AM
திருநெல்வேலி:
திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவிகள் வகுப்பறையிலேயே மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட 6 மாணவிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
இங்குள்ள இப்பெண்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் பள்ளி சீருடை அணிந்த சிலர் மது அருந்துவதும், அதன் நெடி தாங்காமல் சிலர் முகம் சுளிப்பதுமாக உள்ளது. இதனை விளையாட்டுத்தனமாக எடுத்து அவர்களே வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோரை வரவழைத்து விசாரித்தது. சம்பந்தப்பட்ட 6 மாணவிகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் கூறுகையில் ''இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் நடந்துள்ளது. விசாரித்து சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அம்மாணவிகள் தற்போது தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரிக்கிறோம்'' என்றார்.

