ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., உட்பட 63 இடங்களுக்கு மே 2ல் தேர்வு
ஆர்.டி.ஓ., டி.எஸ்.பி., உட்பட 63 இடங்களுக்கு மே 2ல் தேர்வு
UPDATED : டிச 21, 2009 12:00 AM
ADDED : டிச 21, 2009 09:38 AM
அ நிறம் | அளவு
காலியாக உள்ள 13 ஆர்.டி.ஓ., 8 டி.எஸ்.பி., 23 கூட்டுறவு துணை பதிவாளர், 17 ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உட்பட 63 பணியிடங்களுக்கு, முதல்நிலைத் தேர்வு மே 2ல் நடக்கிறது. ஜன.,29க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடந்த இரண்டு குரூப் 1 தேர்வு நியமனங்களிலும் டி.எஸ்.பி., பணியிடங்கள் இடம்பெறவில்லை. இம்முறை எட்டு பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
மேலும், தலைமை செயலக உதவி அதிகாரி, நகராட்சி கமிஷனர், சார் பதிவாளர் போன்ற 1200 பணியிடங்களுக்கு, நடத்தப்படும் குரூப் 2 தேர்வில் பங்கேற்க, டிச.,30க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
