தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கு ரூ.8 கோடியில் பசுமை கட்டடம்

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கு ரூ.8 கோடியில் பசுமை கட்டடம்

தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கு ரூ.8 கோடியில் பசுமை கட்டடம்


UPDATED : பிப் 17, 2013 12:00 AM

ADDED : பிப் 17, 2013 08:03 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 17, 2013 12:00 AM ADDED : பிப் 17, 2013 08:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொருளாதார சூழலால், கல்வியை தொடர இயலாத மக்கள், தொலைதூர பகுதிகளில் வாழும், பின்தங்கிய மக்களுக்கும் உயர் கல்வியை வழங்குவதை நோக்கமாக கொண்டு, 2002ல், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது.

தற்போது, 101 செயல்முறை திட்டங்கள், 143 கல்வி மையங்கள், 184 சமுதாய கல்லூரிகள், 155 கணினி பயிற்சி மையங்கள், 21 பி.எட்., படிப்பு மையங்கள், வெளிமாநிலங்களில், 29 கல்வி மையங்கள், 11 பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு மையங்கள் என, 3.50 லட்சம் மாணவர்கள் இப்பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கின்றனர்.

சைதாப்பேட்டையில், ஏழு மாடி கட்டடத்தில் செயல்பட்டு வரும், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தில், மாணவர் சேர்க்கை, புத்தகம் வழங்குதல், துணைவேந்தர், பதிவாளர் நிர்வாக பிரிவு, மின்னணு ஊடக தயாரிப்பு மற்றும் ஆய்வு மையம், சிறப்பு கல்வி மற்றும் மறுவாழ்வு பள்ளி, மேலாண்மை பள்ளி, தமிழியல் மற்றும் பண்பாட்டு பள்ளி, தொடர்கல்வி பள்ளி, கலையியல் பள்ளி, வரலாறு மற்றும் சுற்றுலாவியல் பள்ளி உள்ளிட்டவை செயல்படுகின்றன.

அனைத்தும் பிரிவுகளும், ஒரே கட்டடத்தில் இயங்கிய வந்த நிலையில், போதிய இடமில்லாத நிலை நிலவி வந்தது. இதுகுறித்து, அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து, பழைய கட்டடத்திற்கு அருகிலேயே, 8.44 லட்ச ரூபாய் செலவில், சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், பசுமை கட்டடம் அமைய உள்ளது.

நான்கு மாடியில் அமையவுள்ள இக்கட்டடத்தில், வீடியோ கான்பிரான்சிங் வகுப்பறை, மின்னணு நூலகம், மொழிபயிற்சி கூடம், தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், பாடத் திட்ட வளர்ச்சி குழு, வெளிநாட்டு பல்கலைக்கழக வகுப்பு நடத்த, நவீன கல்வி கூடங்கள் உள்ளிட்டவை இடம் பெற உள்ளன.

பழைய கட்டடத்தில் நிர்வாக பணிகளும், புதிய கட்டடத்தில் ஆசிரியர் பணிகளும் செயல்பட உள்ளன. இதுகுறித்து, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் கூறியதாவது, "கட்டடத்திற்காக ஆயத்த பணிகள் தயாராக உள்ளன. முதல்வர் விரைவில் அடிக்கல் நாட்ட உள்ளார்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us