தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தர நிர்ணயத்தில் அடுத்தகட்டம் 8 கல்லுாரிகளுடன் ஒப்பந்தம்

தர நிர்ணயத்தில் அடுத்தகட்டம் 8 கல்லுாரிகளுடன் ஒப்பந்தம்

தர நிர்ணயத்தில் அடுத்தகட்டம் 8 கல்லுாரிகளுடன் ஒப்பந்தம்


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 10:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 10:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் உடல் நலனை உறுதி செய்யும் பொருட்டு, வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஐ.எஸ்.ஐ., முத்திரை, தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்களுக்கு ஹால் மார்க் முத்திரை, மின்னணு பொருட்களுக்கு சி.ஆர்.எஸ்., முத்திரை ஆகியவற்றை இந்நிறுவனம் வழங்குகிறது. இந்த நிறுவன செயலாக்கத்தை மேலும் தீவிரப்படுத்தி, மக்களுக்கான நுகர்வு பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் கூடுதலாக்க, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., அரசு திட்டம் வகுத்தது.அதன்படி, இந்தியாவில் உள்ள சிறந்த கல்லுாரிகளுடன் இணைந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் செயல்பட முடிவெடுக்கப்பட்டது. இதன் துவக்கமாக, நாடு முழுதும் நேற்று முன்தினம், 35 கல்லுாரிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதில், தென் இந்தியாவிலிருந்து எட்டு கல்லுாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதில், எஸ்.ஆர்.எம்.,  வி.ஐ.டி., மற்றும் தமிழ்நாடு வேளாண் பொறியியல் என மூன்று கல்லுாரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை. சென்னை தரமணியில் உள்ள, இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல அலுவலகத்தில், நேற்று முன்தினம் மதியம், எட்டு கல்லுாரி நிர்வாகமும், தர நிர்ணய அமைவகமும் ஒப்பந்தம் செய்து கொண்டன.இந்நிகழ்ச்சியில், இந்திய தர நிர்ணய அமைவனத்தின் தென் மண்டல துணை இயக்குனர் யாதவ் மற்றும் பெங்களூரு, ஹைதராபாத், விஜயவாடா, ஹூப்ளி, கொச்சி, மதுரை, கோவை கிளை அலுவலகத்தின் தலைவர்கள், காணொலி வாயிலாக பங்கேற்றனர். தர நிர்ணய அமைவகத்தின் செயல்பாடுகள் குறித்து, கல்லுாரி சார்பில் மாநாடு, கருத்தரங்கு, விழிப்புணர்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us