தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யோகா இயற்கை மருத்துவம் செப்., மாதம் மாணவர் சேர்க்கை

யோகா இயற்கை மருத்துவம் செப்., மாதம் மாணவர் சேர்க்கை

யோகா இயற்கை மருத்துவம் செப்., மாதம் மாணவர் சேர்க்கை


UPDATED : ஆக 06, 2023 12:00 AM

ADDED : ஆக 06, 2023 10:05 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2023 12:00 AM ADDED : ஆக 06, 2023 10:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை, செப்டம்பர் மாதத்தில் துவங்கும் என, இந்திய மருத்துவ தேர்வு குழு அறிவித்துள்ளது.அரசு மற்றும் சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளில், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு, 1,710 இடங்கள் உள்ளன. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கு, https://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், மாணவர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வரும் 14ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, இந்திய மருத்துவக் கல்வி தேர்வு குழு செயலர் மலர்விழி கூறியதாவது:
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விரைவில் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். செப்., மாதத்தில் மாணவர் சேர்க்கை துவங்கும். அதேபோல், நீட் தேர்வு அடிப்படையிலான சித்தா, யுனானி, ஆயுர்வேதம், ஓமியோபதி படிப்புகளுக்கு விண்ணப்பிப்பது அடுத்த வாரத்தில் துவங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us