sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஏப்ரல் 06, 2026 ,பங்குனி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தினமலர் நுாலகத்திற்கு வந்த 88 வயது முதியவர் நெகிழ்ச்சி

/

தினமலர் நுாலகத்திற்கு வந்த 88 வயது முதியவர் நெகிழ்ச்சி

தினமலர் நுாலகத்திற்கு வந்த 88 வயது முதியவர் நெகிழ்ச்சி

தினமலர் நுாலகத்திற்கு வந்த 88 வயது முதியவர் நெகிழ்ச்சி


UPDATED : பிப் 12, 2026 02:30 PM

ADDED : பிப் 12, 2026 02:32 PM

Google News

UPDATED : பிப் 12, 2026 02:30 PM ADDED : பிப் 12, 2026 02:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு:
'தினமலர்' நுாலகத்திற்கு நேற்று 88 வயது முதியவர் வருகை தந்தார். வயதானலும் அதை வெளியில் காட்டி கொள்ளாமல், 'ஏஜ் ஸ் ஜஸ்ட் நம்பர் புரோ' என்று நிறைய பேர் சொல்வது, நிரூபணம் ஆன தருணமாக இருந்தது.

பெங்களூரு சிவாஜி நகரில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தில், 'கடல் தாமரை புத்தக பூங்கா' என்ற பெயரில், கடந்த 6ம் தேதி நுாலகம் திறக்கப்பட்டு உள்ளது. மறுநாளில் இருந்து நுாலகத்திற்கு, நிறைய பேர் வருகை தர ஆரம்பித்தனர்.

தம்பதி சமேதராகவும் வந்து புத்தகங்களை வியப்புடன் பார்த்தனர். இது வரை 70 வயதுக்கு உட்பட்டவர்கள் வந்த நிலையில், முதல் முறையாக நேற்று, 88 வயது முதியவர் பலராமன் வந்தார்.

தமிழகத்தின் கும்பகோணத்தை சேர்ந்த அவர், தற்போது பெங்களூரு உத்தரஹள்ளியில் வசிக்கிறார். உத்தரஹள்ளியில் இருந்து சிவாஜி நகருக்கு 25 கி.மீ., துாரம் பயணம் செய்து வந்த அவர், புத்தகங்களை ஆர்வமாக எடுத்து புரட்டி படித்தார்.

அப்போது அவரது முகத்தில் உற்சாகம் களைகட்டி இருந்தது.

நுாலகம் குறித்து பலராமன் கூறியதாவது:

இங்கு வந்தது ரொம்ப, ரொம்ப சந்தோஷமாக இருக்கு. குழந்தைகள் முதல் பெரியவங்க வரை படிக்குற மாதிரி, புத்தகத்தை இங்கு குவிச்சு வச்சிருங்கீங்க.

இத விட என்ன வேணும்னு சொல்லுங்க. ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் சூப்பரோ சூப்பர். எனக்கு 88 வயது ஆனாலும், இந்த நுாலகத்துக்கு வரணும்னு ஆசை இருந்துச்சு.

காலையில 08:15 மணிக்கே வீட்டுல இருந்து கிளம்பிட்டேன்; கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் டிராவல் பண்ணி இங்கே வந்துருக்கேன். புத்தங்களோடு இணைச்சு, ஒவ்வொரு நாளையும் கொண்டாடணும். நடுத்தர மக்களுக்கு இந்த புத்தகங்கள கொண்டு போய் சேர்க்கணும். இவ்வாறு அவர் கூறினார்.

பொதுவாக வயதானவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று, சிலர் நினைப்பது உண்டு.

அந்த எண்ணத்தை உடைக்கும் வகையில், சில முதியவர்கள் எங்களால் எல்லாம் முடியும் 'ஏஜ் ஸ் ஜஸ்ட் நம்பர் புரோ' என்று சொல்வர். இது உண்மை என்று நிரூபணம் ஆன தருணமாக, நுாலகத்திற்கு பலராமன் வருகை தந்தது இருந்தது.






      Dinamalar
      Follow us