தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கள்ளர் பள்ளிகளில் பணியாற்ற 89 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு

கள்ளர் பள்ளிகளில் பணியாற்ற 89 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு

கள்ளர் பள்ளிகளில் பணியாற்ற 89 ஆசிரியர்களுக்கு நியமன உத்தரவு


UPDATED : ஜன 06, 2010 12:00 AM

ADDED : ஜன 06, 2010 11:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2010 12:00 AM ADDED : ஜன 06, 2010 11:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணியாற்ற, தேர்வு செய்யப்பட்ட 89 பட்டதாரி ஆசிரியர்களுக்கு, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.


இது குறித்து, தமிழக அரசு கூறியிருப்பதாவது:
கள்ளர் சீரமைப்புத் துறையின் கீழ், கள்ளர் இன மக்களின் கல்வி மேம்பாட்டிற்காக, மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 260 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 43 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளிகளில், கடந்த ஆட்சியில் 156 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதில், 94 பேர் தொகுப்பூதிய அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டனர்.


தற்போது 265 ஆசிரியர்கள் புதிதாக நியமனம் செய்யப்பட்டதோடு, தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த ஆசிரியர்களும் காலமுறை ஊதியத்திற்கு மாற்றப்பட்டனர். தற்போது, வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில், 89 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று பணி நியமன உத்தரவுகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கல்வி உதவித் தொகை


மத்திய அரசின் நிதியுதவியுடன் பள்ளிக் கல்வி, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி, வருவாய் ஆகியவற் றின் அடிப்படையிலான கல்வி உதவித் தொகைகள், கடந்த 2007ம் ஆண்டு முதல் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு அரசால் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 439 ஆயிரம் சிறுபான்மை மாணவ, மாணவியருக்கு, கல்வி உதவித்தொகையாக 26.22 கோடி ரூபாயை, துணை முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us