தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிராக்டிகல் தேர்வை சந்திக்கும் 9 ம் வகுப்பு மாணவர்கள்

பிராக்டிகல் தேர்வை சந்திக்கும் 9 ம் வகுப்பு மாணவர்கள்

பிராக்டிகல் தேர்வை சந்திக்கும் 9 ம் வகுப்பு மாணவர்கள்


UPDATED : பிப் 12, 2011 12:00 AM

ADDED : பிப் 12, 2011 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 12, 2011 12:00 AM ADDED : பிப் 12, 2011 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் படிக்கும் 9 ம் வகுப்பு மாணவர்கள் இந்தாண்டு முதல் பிராக்டிகல் தேர்வுகளை எழுதுவார்கள். பிராக்டிகல் தேர்வு மதிப்பெண் 25 என்றும், தியரி தேர்வு மதிப்பெண் 75 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


தற்போது மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் 9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்கள் பிராக்டிகல் தேர்வை எழுதி வருகிறார்கள். அதைப் பின்பற்றி, சமச்சீர் கல்வியின் ஒரு பகுதியாக மாநில கல்வி வாரிய(ஸ்டேட் போர்ட்) பள்ளிகளிலும் இந்த முறையானது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இதன்மூலம் 10 ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக இருப்பதுடன், அடுத்த வருடம் அறிமுகமாகும் 10 ம் வகுப்பு பிராக்டிகல் தேர்வை எளிதாக எதிர்கொள்ளவும் உதவும் என்று சம்பந்தப்பட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிராக்டிகல் தேர்வுக்கு தேவையான உபகரணங்களை வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும் மத்திய அரசு திட்டத்தின்கீழ் ரூ.25000 வழங்கப்பட்டுள்ளது. இதைத்தவிர பள்ளி கல்வித்துறையால் வழங்கப்பட்ட சிறப்பு நிதியையும் இந்த நோக்கத்திற்கு பள்ளிகள் பயன்படுத்தும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


சமச்சீர் கல்வியின் அடிப்படையில் இந்தாண்டு 1 மற்றும் 6 ம் வகுப்புகளில் புதிய பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. இனி வரும் ஆண்டு முதல் 2,5,7 மற்றும் 10 ம் வகுப்புகளிலும் புதிய பாடத்திட்டங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us