UPDATED : மே 12, 2011 12:00 AM
ADDED : மே 12, 2011 11:54 AM
மனித உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் 30 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் ஜீன்கள் உள்ளன. இந்த ஜீன்கள் தான் மரபு ரீதியான குணங்களை சந்ததிகளுக்கு எடுத்துச் செல்பவை.
ஒரு செல் அல்லது உயிரினத்தில் உள்ள ஜீன்களை அலசி ஆராய்ந்து, அந்த உயிரினத்தின் மரபியல் பண்புகளை முழுமையாக படிப்பது ஜெனிடிக் இன்ஜினியரிங் எனப்படும். ஜெனிடிக் இன்ஜினியரிங் மூலமாக தேவையான மரபியல் பண்புகளை சேர்ப்பதோ தேவையற்ற மரபியல் பண்புகளை நீக்குவதோ அல்லது ஒரு குறிப்பிட்ட இனத்தின்குணங்களை ஆராய்வதோ சாத்தியமாகிறது.
இத்துறையின் கீழ் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
* மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், மதுரை (www.mkuniversity.org)
* சென்னை பல்கலைக்கழகம், சென்னை (www.unom.ac.in)
* ஸ்ரீராமச்சந்திரா பல்கலைக்கழகம், சென்னை (www.srmc.edu)
* வேலூர் தொழில்நுட்பக் கல்லூரி, வேலூர் (www.vit.ac.in)
* டில்லி பல்கலைக்கழகம், டில்லி (www.du.ac.in)
* பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி (www.bdu.ac.in)
* ஆந்திரா பல்கலைக்கழகம், திருவனந்தபுரம் (www.andhrauniversity.info)
