UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM
ADDED : ஜூலை 29, 2011 11:10 AM
அரசு தொழில்நுட்பத் தேர்வெழுத விரும்பும் மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆகஸ்ட் 25ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
ஓவியம், தையல், நடனம், இசை, விவசாயம், கைத்தறி, அச்சுக்கலை உள்ளிட்ட பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்பத் தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 25ம் தேதி வரை சென்னையில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள், அரசுத் தேர்வுகள் மண்டலத் துணை இயக்குநர் அலுவலகங்களில் விநியோகிக்கப்படும்.
விண்ணப்பங்களை ஆகஸ்ட் 25ம் தேதிக்குள் கூடுதல் செயலாளர் (தொழில்நுட்பத் தேர்வு), அரசுத் தேர்வுகள் இயக்ககம், கல்லூரிச் சாலை, சென்னை - 6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
