UPDATED : ஜூலை 29, 2011 12:00 AM
ADDED : ஜூலை 29, 2011 11:37 AM
அ நிறம் | அளவு
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு துவங்கி ஜுலை 28ம் தேதி முடிவில் 54,699 மாணவர்கள் பொறியயல் படிப்புகளில் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இதில் அண்ணா பல்கலைக்கழகத்தில் 6302 மாணவர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 4534 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். அதிகப்படியாக சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 43863 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
இன்னும் அண்ணா பல்கலைக்கழகத்தில் 1283 இடங்கள் காலியாக உள்ளன. அரசு பொறியியல் கல்லூரிகளில் வெறும் 20 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன. சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 91065 இடங்கள் காலியாக உள்ளன. இந்த இடங்களில் மாணவர்களை சேர்க்க தொடர்ந்து கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
