தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொருளாதாரத்தில் பிஎச்.டி படிப்பு

பொருளாதாரத்தில் பிஎச்.டி படிப்பு

பொருளாதாரத்தில் பிஎச்.டி படிப்பு


UPDATED : அக் 18, 2011 12:00 AM

ADDED : அக் 18, 2011 04:39 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 18, 2011 12:00 AM ADDED : அக் 18, 2011 04:39 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருவனந்தபுரம்: கேரள தலைநகர் திருவனந்தபுரத்திலுள்ள டெவலப்மெண்ட் படிப்புகளுக்கான மையம்(CDS), தனது முழுநேர ரெசிடென்ஷியல் ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த கல்வி மையம், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரத் துறையில் Ph.d -க்கான இந்த ஆராய்ச்சிப் படிப்பு, அடுத்தாண்டு ஜனவரி 2ம் தேதி தொடங்குகிறது. M.phil படிப்பில் உயர் இரண்டாம் நிலை மதிப்பெண் எடுத்தவர்கள் மற்றும் முதுநிலைப் பொருளாதாரம் அல்லது அது தொடர்பான படிப்புகளில் 55% மதிப்பெண் எடுத்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். M.phil படிப்பு தேர்வு முடிவுகளுக்கு காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.

வேளாண்மை மற்றும் இயற்கை வளம், பாலினம் மற்றும் மேலாண்மை, தொழில்துறை, வணிகம் மற்றும் தொழில்நுட்பம், இடப்பெயர்வு, மக்கள்தொகை மற்றும் மனிதவள மேம்பாடு, வறுமை, பாதிக்கப்படுதல் மற்றும் சமூகப் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் பணியாளர் மற்றும் வேலை வாய்ப்பு ஆகிய துறைகளில் தமது ஆய்வு செயல்திட்டத்தை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பத்தில் தெரிவித்திருக்க வேண்டும்.

இதனடிப்படையில், விண்ணப்பங்கள் ஆய்வுசெய்யப்பட்டு, எழுத்துத் தேர்விற்கு தேர்ந்தெடுக்கப்படும் மற்றும் நேர்முகத் தேர்வானது திருவனந்தபுர மைய வளாகத்தில் டிசம்பர் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறும்.

இதற்கான விண்ணப்பங்களை www.cds.edu என்ற வலைத்தளத்திலிருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். தேர்வு கட்டணம் ரூ.200. அதேசமயம் SC/ST மற்றும் மாற்று திறனாளிகள் ஆகிய பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

தேவையான ஆவணங்கள் இணைந்த முழுவதும் நிரப்பப்பட்ட விண்ணப்பம் அக்டோபர் 31ம் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

இதுதொடர்பான முழுமையான விபரங்களை அறிய www.cds.edu என்ற இணையதளம் செல்க அல்லது 0471-244 8881 என்ற எண்ணை தொடர்புகொள்க.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us